மசாசூசெட்ஸ்
உலக கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் மொராக்கோ அணிகள் இடையிலான லீக் ஆட்டம் போஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், மொராக்கோ வீரர் இஸ்மாயில் சாய்பாரி அதிரடியாக விளையாடி, ஸ்காட்லாந்து அணியின் உள்ளே புகுந்து கோல் போட்டார்.
போட்டி தொடங்கி 1 நிமிடம் 10 வினாடிகளில் இந்த கோல் அடிக்கப்பட்டது. நடந்து வரும் பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் விரைவாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். நடப்பு தொடரில், மொராக்கோ அணியின் மிக விரைவான கோல் சாதனையாகவும் இது உள்ளது. இதனால், சி-பிரிவில் 4 புள்ளிகள் முன்னேறியது. போட்டியிலும் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி மொராக்கோ வெற்றி பெற்றது.
இந்த தொடரில், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது செக்கியாவின் மிச்சல் சாதிலேக் (5 நிமிடங்கள் 10 வினாடிகள்) அடித்திருந்ததே விரைவான கோலாக இதுவரை பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதனை சாய்பாரி முறியடித்து உள்ளார்.