கால்பந்து

நேஷன்ஸ் லீக்: நார்வேயை வீழ்த்திய போர்ச்சுக்கல் - காலிறுதிக்கு தகுதி

‘ஏ2’ பிரிவில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நார்வேயை வீழ்த்தி போர்ச்சுக்கல் காலிறுதிக்கு தகுதிபெற்றது.

நார்வேயை வீழ்த்தியது

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில், ‘ஏ4’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - நார்வே அணிகள் மோதின. இதில் போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நார்வேயை வீழ்த்தியது.

போர்ச்சுக்கல் தரப்பில் கான்சிலோ, ரமோஸ் ஆகியோர் கோல் அடித்தனர். நார்வே அணிக்காக கிறிஸ்டோபர் ஆஜெர் ஒரு கோல் அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளை பெற்ற போர்ச்சுக்கல், காலிறுதிக்கு தகுதி பெற்றது. இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க் 1-0 என்ற கோல் கணக்கில் வேல்சை வீழ்த்தியது.

நெதர்லாந்து வெற்றி

‘ஏ2’ பிரிவில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது. இது அந்த அணியின் 2-வது வெற்றியாகும். 8 புள்ளிகளுடன் நெதர்லாந்து அணி உள்ளது.

இதே பிரிவில் ஜெர்மனி - கிரீஸ் இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. ‘பி3’ பிரிவில் அயர்லாந்து - இஸ்ரேல் ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

SCROLL FOR NEXT