கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை: பிரேசிலை முந்திய ஜெர்மனி

ஜெர்மனி, இந்த தொடரில் மேலும் பல சாதனைகளை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

வாஷிங்டன்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முந்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணி, கியூராசாவை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி, கியூராசாவ் அணிக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் கோல் மழை பொழிந்தது.

உலகக் கோப்பை வரலாற்றில் புதிய மைல்கல்

இந்த போட்டியில் அடித்த 7 கோல்களையும் சேர்த்து உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஜெர்மனியின் மொத்த கோல் எண்ணிக்கை 239-க உயர்ந்தது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற சாதனையை ஜெர்மனி தன்வசப்படுத்தியுள்ளது.

பிரேசிலின் சாதனையை முறியடித்தது

இதற்கு முன்பு உலகக் கோப்பை போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த அணியாக பிரேசில் 238 கோல்களுடன் முதலிடத்தில் இருந்தது. தற்போது 239 கோல்களை எட்டியுள்ள ஜெர்மனி, பிரேசிலை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்துள்ளது.

ஜெர்மனியின் ஆதிக்கம் தொடருமா?

உலகக் கோப்பை மேடையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜெர்மனி, இந்த தொடரிலும் கோல் வேட்டையை தொடர்கிறது. உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற பெருமையை பெற்றுள்ள ஜெர்மனி, இந்த தொடரில் மேலும் பல சாதனைகளை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.