கால்பந்து

ஐ.எஸ்.எல் : 48ல் முன்னிலை…85ல் அதிர்ச்சி; மும்பை - நார்த் ஈஸ்ட் ஆட்டம் 'டிரா'

நேற்று நார்த் ஈஸ்ட் யுனைடெட் மற்றும் மும்பை அணிகள் மோதின.

மும்பை,

2025-26 ஆம் ஆண்டுக்கான ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்று, சொந்த மற்றும் வெளியூர் மைதானங்களில் 91 ஆட்டங்களில் மோதுகின்றன.

இந்நிலையில், நேற்று நார்த் ஈஸ்ட் யுனைடெட் மற்றும் மும்பை அணிகள் மோதின. மும்பையில் நடந்த இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

போட்டியின் 48-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஜிதின் எம்.எஸ். கோல் அடித்து நார்த்ஈஸ்ட் யுனைடெட்டுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அதற்கு பதிலடியாக 85-வது நிமிடத்தில் மும்பை கேப்டன் லாலியன்சுவாலா சாங்க்டே கோல் அடித்து நார்த் ஈஸ்ட் அணிக்கு அதிர்ச்சியளித்தார். அதன் பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி சமனில் முடிந்தது.