கால்பந்து

கடைசி நேரத்தில் கைகொடுத்த கேப்டன்... ஹல் சிட்டியை வீழ்த்தி ஆர்சனல் அசத்தல் வெற்றி

முதல் பாதி கோல் இன்றி முடிந்தது.

லண்டன்,

ஹல் சிட்டி அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சனல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் பாதி

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஹல் சிட்டி -ஆர்சனல் அணிகள் மோதின. எமிரேட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் ஆர்சனல் அணி பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஹல் சிட்டியின் தடுப்பாட்டத்தைத் தாண்டி கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி கோல் இன்றி முடிந்தது.

கைகொடுத்த கேப்டன்

இரண்டாவது பாதியிலும் ஆர்சனல் அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. 72-வது நிமிடத்தில் நோனி மடூகே அடித்த பந்தை ஹல் சிட்டி கோல்கீப்பர் தடுக்க முயன்றார். ஆனால், பந்து அவரது கையில் இருந்து நழுவியநிலையில், அதை கேப்டன் மார்ட்டின் ஒடேகார்ட் கோலாக மாற்றினார்.

இதன் மூலம் ஆர்சனல் அணி 1-0 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் ஹல் சிட்டி அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆர்சனல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முதலிடம்

இந்த வெற்றியின் மூலம் ஆர்சனல் அணி விளையாடிய 10 போட்டிகளில் 9 வெற்றிகளைப் பெற்று 27 புள்ளிகளுடன் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

SCROLL FOR NEXT