கால்பந்து

உலகக் கோப்பை போட்டியில் பயன்படுத்திய பீலே சீருடை ரூ.47 கோடிக்கு ஏலம்

பீலே பயன்படுத்திய சீருடை ஏலத்தில் விடப்பட்டது.

நியூயார்க்,

1958-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி 5-2 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த ஆட்டத்தில் பிரேசில் அணிக்காக ஆடிய ஜாம்பவான் பீலே பயன்படுத்திய சீருடை ஏலத்தில் விடப்பட்டது.

இந்த சீருடை ரூ.47.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 1986-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா கேப்டன் மரடோனா அணிந்திருந்த சீருடை கடந்த 2022-ம் ஆண்டில் ரூ.89.5 கோடிக்கு ஏலம் போனது. அதுவே அதிக விலைக்கு ஏலம் போன கால்பந்து வீரரின் சீருடை என்பது நினைவுகூரத்தக்கது.