மான்செஸ்டர் ,
பிரீமியர் லீக் கால்பந்து நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் -மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மான்செஸ்டர் சிட்டி அணிக்கு 7- வது நிமிடத்தில் எதிரணி வீரர் எரிக் பெய்லி பந்த தடுக்க முயன்றபோது கோல் ஆக மாறியது .இதனால் 1- 0 என மான்செஸ்டர் சிட்டி முன்னிலை பெற்றது .
இதனை தொடர்ந்து 45- வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி வீரர் பெர்னார்டோ சில்வா ஒரு கோல் அடித்தார் இதனால் முதல் பாதி முடிவில் 2- 0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி முன்னிலை பெற்றது . முதல் பாதியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சிகள் வீணாகின.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை .இதனால் மான்செஸ்டர் சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது .