மான்செஸ்டர்,
மான்செஸ்டர் சிட்டி அணியின் 25 வயதான ஹாலண்ட் தனது 300-வது கிளப் கோலை அடித்து சாதனை படைத்துள்ளார்.
பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி- கோவென்ட்ரி எப்சி அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக போராடின. அப்போது 26-வது நிமிடத்தில் ஹாலண்ட் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
அதன்பிறகு கோவென்ட்ரி எப்சி அணி கோல் அடிக்க கடுமையாக முயன்றது. இருப்பினும், மான்செஸ்டர் சிட்டியின் தடுப்பாட்டத்தை அந்த அணியால் உடைக்க முடியவில்லை. இறுதியில் ஹாலண்ட் அடித்த ஒரே கோல் மான்செஸ்டர் சிட்டியின் வெற்றிக்கு போதுமானதாக அமைந்தது.
இந்த கோல் ஹாலண்ட், மான்செஸ்டர் சிட்டி அணிக்காக அடித்த 165-வது கோல் ஆகும். இதற்கு முன்பு அவர் பொரூசியா டார்ட்மண்ட் அணிக்காக 86 கோல்களும், ரெட் புல் சால்ஸ்பர்க் அணிக்காக 29 கோல்களும், மோல்டே எப்சி அணிக்காக 20 கோல்களும் அடித்துள்ளார்.
இதன் மூலம் கிளப் கால்பந்து வாழ்க்கையில் ஹாலண்ட் 300 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
நார்வேயின் நட்சத்திர வீரரான ஹாலண்ட், பிரீமியர் லீக்கிற்கு புதிதாக தகுதி பெற்று வரும் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அத்தகைய அணிகளுக்கு எதிராக இதுவரை 20 கோல்களை அடித்துள்ளார்.
கடந்த சீசனில் சுந்தர்லேண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் அவர் கோல் அடிக்க தவறியிருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து 3-வது வெற்றியை பதிவு செய்து, பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.