கால்பந்து

உலகின் சிறந்த கால்பந்து வீரர் எம்பாப்பே குறித்து பேசிய பிரதமர் மோடி...!!

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

தினத்தந்தி

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினார்.

பின் அங்கு வசித்து வரும் இந்தியர்களை சந்தித்து அவர்களுடன் உரையாற்றினார். அப்போது, அவர் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வரும் பிரான்ஸ் நாட்டின் எம்பாப்பே குறித்து பேசினார்.

எம்பாப்வே குறித்து பிரதமர் மோடி கூறுகையில் ''இந்திய இளைஞர்களிடையே எம்பாப்பே சூப்பர் ஹீரோவா திகழ்கிறார். எம்பாப்பே-ஐ அனேகமாக பிரான்சை விட இந்திய மக்கள் அதிகமானோருக்கு தெரிந்திருக்கலாம்'' என்றார்.

பிரெஞ்ச் லீக் மற்றும் சர்வதேச போட்டிகளில் எம்பாப்பே அபாரமாக விளையாடி வருகிறார். உலகக்கோப்பை கால்பந்தில் அர்ஜென்டினாவிற்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அமெரிக்காவில் பேஸ்பால் விளையாட்டுக்கு இடையே கிரிக்கெட்டும் வளர்ந்து வருகிறது என்றார்.

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி