கால்பந்து

15 நிமிடங்களில் ஹாட்ரிக்! 41 வயதிலும் மிரட்டும் ரொனால்டோ: அல் நஸர் வெற்றி

கால்பந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில் அல் நஸர் அணிக்காக விளையாடி வரும் போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல் கோலூத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் அல் நஸர் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தன. இரண்டாவது பாதியில் ரொனால்டோ தனது அதிரடியைத் தொடங்கினார். ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த அவர், 72-வது நிமிடத்தில் தலையால் முட்டி இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். தொடர்ந்து 81-வது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்து தனது ஹாட்ரிக்கை நிறைவு செய்தார்.

இதன் மூலம் வெறும் 15 நிமிடங்களில் மூன்று கோல்கள் அடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

மொத்த கோல்

41 வயதிலும் தனது கோல் அடிக்கும் திறனை நிரூபித்துள்ள ரொனால்டோவுக்கு இது அல் நஸர் அணிக்காக 7வது ஹாட்ரிக் ஆகும்.

இந்த ஹாட்ரிக் மூலம் கிளப் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் ரொனால்டோவின் மொத்த கோல் எண்ணிக்கை 985 ஆக உயர்ந்துள்ளது. வரலாற்றுச் சாதனையான 1,000 கோல்களை எட்ட இன்னும் 15 கோல்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

SCROLL FOR NEXT