கால்பந்து

ரொனால்டோவா? மெஸ்சியா? - ஜெர்மனி ஜாம்பவான் ஆலிவர் கான் நச் பதில்

ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

சென்னை,

ரொனால்டோவா? மெஸ்சியா? என்ற கேள்விக்கு முன்னாள் ஜெர்மனி கோல்கீப்பர் ஆலிவர் கான் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

நீண்ட காலமாக நீடிக்கும் விவாதம்

கால்பந்து உலகில், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்சி ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

ஆலிவர் கான் கருத்து

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஜெர்மனியின் முன்னாள் கோல்கீப்பர் ஆலிவர் கான் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

ஒருவரை ஒருவர் உயர்த்திய போட்டி

இதுகுறித்து அவர் கூறுகையில்,

"கிறிஸ்டியானோ ரொனால்டோவும், லியோனல் மெஸ்சியும் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக, ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனர். அவர்கள் நீண்ட காலமாக வெளிப்படுத்திய ஆட்டம் உண்மையிலேயே அசாதாரணமானது" என்றார்.

வார்த்தைகளால் அல்ல, ஆட்டத்தால் பதிலடி

மேலும் அவர் கூறுகையில்,

"அவர்களுக்கிடையேயான போட்டி வார்த்தைகளில் அல்ல, மைதானத்தில் வெளிப்படுத்திய ஆட்டத்தில்தான் இருந்தது. ஒவ்வொரு சீசனிலும் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தை இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்படுத்தினர். அந்த ஆரோக்கியமான போட்டியே, இருவரையும் கால்பந்து உலகின் உச்ச நட்சத்திரங்களாக உயர்த்தியது"என்று தெரிவித்தார்.