கால்பந்து

மெஸ்ஸியை தடுக்க தனி திட்டம்: இங்கிலாந்து பயிற்சியாளர்

2-வது அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

வாஷிங்டன்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழா 'கிளைமாக்சை' நெருங்கி விட்டது.

இதில் இந்திய நேரப்படி அட்லாண்டாவில் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தொடர்பாக இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்சேல் கூறியதாவது,

மெஸ்ஸியை தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் கண்டுபிடித்து வருகிறோம். ஆட்டத்தின் போக்கை மாற்றும் வகையில் அவர் செயல்படுகிறார். அவரது நகர்வுகளை கவனித்து தயாராகி வருகிறோம். என தெரிவித்தார்.

அர்ஜென்டினா அணியில் எதிர்பார்த்தபடியே மெஸ்ஸி கதாநாயகனாக ஜொலிக்கிறார். நடப்பு தொடரில் 6 ஆட்டங்களில் 8 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.