கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து தொடர்; தென்ஆப்பிரிக்க வீரர் 25 வயதில் மரணம் அடைந்த சோகம்

அவர் மரணம் அடைந்ததற்கான காரணம் பற்றி வெஸ்டர்ன் கேப் காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஜோகன்னஸ்பர்க்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தென்ஆப்பிரிக்க அணி சார்பில் விளையாடிய வீரர் 25 வயதில் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பரபரப்பான கட்டத்திற்கு சென்றுள்ளது. இதில், தென்ஆப்பிரிக்க அணி சார்பில் விளையாடிய வீரர் ஜெய்டன் ஆடம்ஸ். (வயது 25). போட்டியின் ரவுண்ட் ஆப் சுற்று போட்டிகளுக்கு முன்னேறிய தென்ஆப்பிரிக்க அணியில் இடம் பெற்றிருந்த அவர், இளம் வயதில் காலமானார். இதனை தென்ஆப்பிரிக்க அணியின் கால்பந்து வீரர்களுக்கான யூனியன் உறுதிப்படுத்தி உள்ளது.

நாக்-அவுட் சுற்று

அணிக்கான 3 போட்டிகளில் விளையாடிய அவர், தென்கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தபோது, அணியில் இடம் பெற்றவர். இந்த வெற்றியால், அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. வரலாற்றில் முதல் முறையாக அந்த அணி உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் முன்னேறி இருந்தது.

அவர் மரணம் அடைந்ததற்கான காரணம் பற்றி உடனடியாக தகவல் வெளிவரவில்லை. அதுபற்றி வெஸ்டர்ன் கேப் காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அவருடைய மரணத்திற்கான சூழல் குறித்து விசாரித்து வருகிறோம் என்று காவல் துறை அதிகாரி வேன் விக் கூறினார்.