கால்பந்து

மகளிர் ஆசியக் கோப்பை: சீன அணியிடம் வீழ்ந்த இந்தியா - உலகக் கோப்பை கனவு கலைந்தது

சீன அணியிடம் இந்தியா 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

சூஜோ ,

சீனாவின் சூஜோ நகரில் நடைபெற்ற மகளிர் 17 வயதுக்குட்பட்டோருக்கான (U17) ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில், இந்திய அணியின் சிறப்பான பயணம் முடிவுக்கு வந்தது. நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான கால் இறுதிப் போட்டியில், போட்டியை நடத்தும் சீன அணியிடம் இந்தியா 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இந்தத் தோல்வியின் மூலம், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும் இந்தியாவின் கனவு தகர்ந்தது.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும், இத்தொடரின் வரலாற்றில் முதல் முறையாக நாக்-அவுட் (knockout) சுற்றுக்கு முன்னேறி தனது மிகச்சிறந்த செயல்பாட்டை இந்தியா பதிவு செய்துள்ளது.