ரியேகா,
நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ஏ3 பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் ஹேரி கேன், கோல் அடித்து இங்கிலாந்தை முன்னிலை பெற செய்தார்.
தொடர்ந்து 21-வது நிமிடத்தில் அந்தோனி கார்டன் வழங்கிய பாஸை கோலாக மாற்றிய பெலிங்ஹாம், இங்கிலாந்தின் முன்னிலையை 2-0 என அதிகரித்தார்.
39-வது நிமிடத்தில் ஜாரெல் குவான்சா கொடுத்த கிராஸை அந்தோனி கார்டன் தலையால் முட்டி கோலாக்கினார்.
அப்போது முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் பெலிங்ஹாம் கொடுத்த பாஸை புகாயோ சகா கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியின் முடிவில் இங்கிலாந்து 4-0 என வலுவான முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி தொடங்கிய 7-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து மீண்டும் கோல் அடித்தது. 52-வது நிமிடத்தில் எலியட் ஆண்டர்சன் கொடுத்த பாஸை பயன்படுத்திக் கொண்ட ஹேரி கேன் தனது 2-வது கோலை அடித்தார்.
இதையடுத்து 68-வது நிமிடத்தில் புகாயோ சகா தனது 2-வது கோலை பதிவு செய்தார். இதனால் இங்கிலாந்து 6-0 என முன்னிலை பெற்றது.
அப்போது ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய மோர்கன் ரோஜர்ஸ், இங்கிலாந்தின் 7-வது கோலை அடித்தார். இதன் மூலம் குரோஷியாவை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து, நேஷன்ஸ் லீக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் ஏ3 பிரிவில் 3 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 2-வது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் உள்ள ஸ்பெயின் அணியை விட இங்கிலாந்து 3 புள்ளிகள் பின்தங்கியுள்ளது.