வாஷிங்டன்,
வெனிசுலா நாட்டில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 1,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கடும் பாதிப்பை சந்தித்துள்ள வெனிசுலா நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் தனியார் அமைப்புகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவிற்கு மருத்துவ உதவி, அவசரகால நிவாரணப் பணிகளுக்காக 2.5 லட்சம் டாலரை (சுமார் 2.4 கோடி ரூபாய்) பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் வழங்கியுள்ளார். வெனிசுலா மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக கூறிய நெய்மர், அந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு தவிக்கும் குடும்பங்களுக்குத் தனது பங்களிப்பு வலிமையையும் ஆறுதலையும் அளிக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.