கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: மெஸ்ஸி புதிய சாதனை

மொத்த உலகக்கோப்பை தொடரில் அவரது 20வது கோல் ஆகும்.

வாஷிங்டன்,

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட் சுற்றுகள்) பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், நடந்த 2-வது சுற்று நாக் அவுட் ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா மற்றும் கேப் வெர்தே அணிகள் விளையாடின.

இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் கேப் வெர்தே அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மெஸ்ஸி 1 கோல் அடித்தார். இது மொத்த உலகக்கோப்பை தொடரில் அவரது 20வது கோல் ஆகும்.

இந்த நிலையில், 39 வயதான மெஸ்ஸி , உலகக் கோப்பையில் தொடர்ந்து 5 நாக்-அவுட் சுற்று ஆட்டங்களில் கோல் போட்டுள்ளார். 64 ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து 5 நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.