கால்பந்து

அமெரிக்காவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி - ஈரான் பங்கேற்பதில் சிக்கல்?

ஈரான் அணி உலகக் கோப்பையில் பங்கேற்குமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.

தெக்ரான்,

23வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டில் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடக்க இருக்கும் இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட் டுள்ளன.

ஈரான் அணி ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. லீக் ஆட்டங்களில் அவர்கள் எதிர்கொள்கின்ற அணி விவரங்கள்:

ஜூன் 15 - நியூசிலாந்து

ஜூன் 21 - பெல்ஜியம்

ஜூன் 26 - எகிப்து

இந்த மூன்று ஆட்டங்களும் அமெரிக்காவில் நடைபெற உள்ளன.

ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது போர் தொடுத்து இருப்பதால், ஈரான் அணி உலகக் கோப்பையில் பங்கேற்குமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. இது குறித்து ஈரான் கால்பந்து சம்மேளன தலைவர் மெக்தி தாஜ் கூறுகையில்,

“அமெரிக்காவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியில் ஈரான் அணி பங்கேற்குமா என்பது எனக்கு தெரியாது. இத்தகைய தாக்குதலுக்குப் பிறகு, உலகக் கோப்பை போட்டியை நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்க முடியாது” என்றார்.