கால்பந்து

மெஸ்ஸியின் கோல் வேட்டை தொடருமா ? கேப்வெர்டே அணியுடன் நாளை மோதல்

அர்ஜென்டினா, கேப்வெர்டேவுடன் நாளை மோதுகிறது.

மியாமி,

உலகக் கோப்பை கால்பந்தின் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, கேப்வெர்டேவுடன் நாளை மோதுகிறது. உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாளை யுடன் 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட்) முடிவுக்கு வருகிறது.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு மியாமியில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா, அறிமுக அணியான கேப்வெர்டேவை சந்திக்கிறது.

நடப்பு சாம்பியன் அந்தஸ்துக்கு ஏற்ப அர்ஜென்டினா இதுவரை பிரமாத மாக விளையாடி இருக்கிறது. லீக் சுற்றில் அல்ஜீரியா (3-0), ஆஸ்திரியா (2-0), ஜோர்டான் (3-1) ஆகிய அணிகளை போட்டுத் தாக்கி தனது பிரி வில் முதலிடம் பிடித்தது. கேப்டன் மெஸ்சி 3 ஆட்டங்களில் 6 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

புதுமுக அணி என்றாலும் ஆப்பிரிக்க கண்டத்தின் குட்டி தேசமான கேப் வெர்டேவை குறைத்து மதிப்பிட முடியாது. லீக் சுற்றில் தோல்வியே சந் திக்காத அந்த அணி ஸ்பெயின் (0-0), உருகுவே (2-2) மற்றும் சவுதிஅரேபியா (0-0) ஆகிய அணிகளுடன் 'டிரா' செய்து கவனத்தை ஈர்த்தது. கேப்வெர்டேவின் பிரதான பலமே தற்காப்பு ஆட்டம் தான். அந்த அணியின் கோல் கீப்பர் வோசின்யா அவர்களுக்கு அரண் போல் பாதுகாத்து நிற்கிறார். ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் 7 கோல் வாய்ப்புகளை தடுத்து ஹீரோவாக ஜொலித்தார். எனவே அவர் அர்ஜென்டினாவுக்கு நிச்சயம் சவாலாக இருப்பார் என நம்பலாம்.