ஸ்பெயின்,
நடப்பு பிபா உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி அபாரமான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
இதுவரை விளையாடிய போட்டிகளில் ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல், உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் கோல் வாங்காத முதல் அணியாக ஸ்பெயின் மாறியுள்ளது.
லீக் சுற்றில் கேப் வெர்டே அணியுடன் 0-0 என டிரா செய்த ஸ்பெயின், அதன் பின்னர் சவுதி அரேபியாவை 4-0, உருகுவேவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரியாவை 3-0 மற்றும் போர்ச்சுகலை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதற்கு முன், 2022 உலகக் கோப்பையில் மொராக்கோவுக்கு எதிரான 2-வது சுற்று ஆட்டத்திலும் கோல் வாங்காமல் இருந்தது. இதன் மூலம் தொடர்ச்சியாக 6 உலகக் கோப்பை ஆட்டங்களில் கோல் வாங்காத முதல் அணியாக ஸ்பெயின் சாதனை படைத்துள்ளது.