சென்னை,
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோ சிட்டியில் அரங்கேறிய நாக் அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் மெக்சிகோ அணி ஈகுவடாரை எதிர்கொண்டது. ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தி 3-வது சுற்று ஆட்டத்திற்கு முன்னேறியது.
இந்த நிலையில் மெக்சிகோவின் வெற்றியை தொடர்ந்து மெக்சிகோ சிட்டியில் கொண்டாட ஏராளமான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி 19 வயது பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிகோ நகர சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.