கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: 3-1 கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய கொலம்பியா

மெக்சிகோ சிட்டி

23-வது உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் மெக்சிகோ சிட்டி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்ற 'கே' பிரிவு லீக் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் மற்றும் கொலம்பியா அணிகள் விளையாடின.

கடந்த 2022-ம் ஆண்டு கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பிய அணி விளையாடவில்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதன்பின்னர் நடப்பு உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடுவதற்காக அந்த அணி மீண்டும் வந்துள்ளது.

40-வது நிமிடம்

4 அணிகள் இந்த தொடரில் புதிதாக விளையாடுகின்றன. இதேபோன்று உஸ்பெகிஸ்தான் அணி முதன்முறையாக உலக கோப்பை தொடரில் விளையாடுகிறது. முதல் பாதியில் 40-வது நிமிடத்தில் கொலம்பிய அணியின் வீரர் டேனியல் முனோஸ் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்பாக கூடியது.

ஆட்டத்தில் யாருக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்படவில்லை. ஆனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

போட்டியின் 2-வது பாதியில் உஸ்பெகிஸ்தான் அணியின் அப்போஸ்பெக் பைசுல்லாயேவ் கோல் அடித்ததும் போட்டி சமனானது. இதனால், வெற்றியை முடிவு செய்யப்போவது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அடுத்த 5-வது நிமிடத்தில் (65) கொலம்பிய அணியின் வீரர் லூயிஸ் டையஸ் மற்றொரு கோல் அடித்து 2-1 என்ற புள்ளி கணக்கில் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.

90 நிமிடங்கள் முடிந்ததும் கூடுதலாக நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதனை கொலம்பியா பயன்படுத்தி ஒரு கோல் அடித்தது. அந்த அணியின், ஜேமின்டன் கேம்பாஸ் அடித்த கோலால் 3-1 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தான் அணியை கொலம்பியா வீழ்த்தி வெற்றி பெற்றது.

கூடுதல் நிமிடங்கள்

90 நிமிடங்கள் முடிந்ததும், போட்டியில் விளையாடாமல் விடப்பட்ட நிமிடங்களை ஈடுகட்ட கூடுதலாக சில நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதனை கொலம்பியா பயன்படுத்தி ஒரு கோல் அடித்தது. அந்த அணியின், ஜேமின்டன் கேம்பாஸ் அடித்த கோலால் 3-1 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தான் அணியை கொலம்பியா வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த பிரிவில் காங்கோ, போர்ச்சுகல் ஆகிய இரு அணிகளும் போட்டியை டிரா செய்த நிலையில், கொலம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் என இரு அணிகளில் வெற்றி பெறும் அணி பட்டியலில் முதல் இடத்திற்கு செல்லும் வாய்ப்பு இருந்தது. அதன்படி, போட்டியில் வெற்றி பெற்ற கொலம்பியா டாப் 4-ல் முதல் இடத்திற்கு சென்றுள்ளது. கத்தாரில் கடந்த முறை நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பிய அணி விளையாடாத நிலையில், இந்த முறை அதிரடியாக விளையாடி கே பிரிவின் பட்டியலில் முதல் இடமும் பிடித்துள்ளது.