கால்பந்து

உலகக் கோப்பை இறுதிப்போட்டி : டெல்லியில் அதிகாலை 4 மணி வரை உணவகங்கள் திறக்க அனுமதி

இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி, ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

புதுடெல்லி,

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியை முன்னிட்டு, ரசிகர்களின் வசதிக்காக டெல்லி அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது இடம்

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இதுவரை 102 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2.30 மணிக்கு மியாமியில் நடைபெறும் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இறுதிப்போட்டி

இதனை தொடர்ந்து, நாளை மறுநாள் இரவு 12.30 மணிக்கு நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி, ஸ்பெயினை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தை காண ரசிகர்கள் பெருமளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களின் வசதிக்காக டெல்லி அரசு இந்த சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது. டெல்லி அரசின் இந்த முடிவுக்கு கால்பந்து ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT