கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: முதல் பாதியில் அர்ஜென்டினா முன்னிலை

ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் முதல் கோலை போட்டார்.

கான்சாஸ் சிட்டி

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் முதல் பாதியில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் நடத்தப்பட்டு வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று போட்டிகள் (நாக்-அவுட் சுற்றுகள்), 3-வது சுற்று போட்டிகள் முடிந்து, காலிறுதி போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

முதல் பாதி

அந்த வகையில், காலை 6.30 மணிக்கு அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி நகரில் உள்ள கான்சாஸ் மைதானத்தில் நடந்த காலிறுதி போட்டி ஒன்றில் அர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் விளையாடின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் முதல் கோலை போட்டார்.

தொடர்ந்து போட்டியின் முதல் பாதி முடியும் வரை வேறு கோல்கள் அடிக்கப்படவில்லை. இதனால், 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலை பெற்றது. எனினும், 68-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி சார்பில் ஒரு கோல் அடிக்கப்பட்டது. இதனால், 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமன் அடைந்துள்ளது. தொடர்ந்து போட்டி நடந்து வருகிறது.