சியாட்டில்
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கடைசி நிமிடத்தில் டையலெமன்ஸ் அடித்த கோலால் செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி பெற்றது.
பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் மற்றும் செனகல் அணிகள் விளையாடின.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் சியாட்டில் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 24-வது நிமிடத்தில் முதல் கோல் அடிக்கப்பட்டது. செனகல் அணியின் வீரர் ஹபீப் டையர்ரா முதல் கோலை போட்டார்.
எனினும், அதன்பின்னர் இரு அணிகளின் தரப்பிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-1 என செனகல் முன்னிலை பெற்றுள்ளது. போட்டியின் முதல் பாதியில் எந்த அணிக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்படவில்லை.
போட்டியின் 2-வது பாதியில் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இதில் செனகல் அணியின் இஸ்மாயிலா சார் 51-வது நிமிடத்தில் அணிக்கான 2-வது கோலை போட்டார். 2 கோல்களுடன் செனகல் முன்னிலையில் இருந்தது. பெல்ஜியம் அணி பின்தங்கி இருந்தது.
ஆனால், போட்டி முடிய கடைசி 5 நிமிடங்கள் இருந்தபோது, அதிசயம் நடந்தது. 86-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் ரோம்லு லுகாகு கோல் போட்டு செனகல் அணிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் 89-வது நிமிடத்தில் யூரி டையலெமன்ஸ் பெல்ஜியம் அணிக்கான மற்றொரு கோலை போட்டார்.
இதனால், 2-2 என போட்டி சமன் அடைந்தது. கூடுதல் நேரம் அளிக்கப்பட்டு, ஆட்டம் தொடர்ந்தது. எனினும், மொத்தம் 120 நிமிடங்கள் வரை போட்டி நீடித்தும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. அதன்பின்னர் 125-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, யூரி டையலெமன்ஸ் அடித்த கோலால் பெல்ஜியம் அணி 3 கோல்களுடன் முன்னிலை பெற்றது.
அதன்பின்னர் கோல்கள் அடிக்கப்படவில்லை. இதனால், கூடுதல் நேர முடிவில், பெல்ஜியம் வெற்றி பெற்றது. 2-வது பாதியின் கடைசி நிமிடத்தில் டையலெமன்ஸ் அடித்த கோலால் செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி பெற்றது. போட்டியின் 2-வது பாதியில் இரு அணிகளுக்கும் தலா ஒரு முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.