ஆர்லிங்டன்
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சுவீடனுக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில் 0-1 என பிரான்ஸ் முன்னிலை பெற்றுள்ளது.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் நடந்து வரும் 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ளன. 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில், அதிகாலை 2.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் மற்றும் சுவீடன் அணிகள் விளையாடின. அமெரிக்காவின் நியூஜெர்சி மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 45-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோலை போட்டார்.
அதன்பின்னர், கோல் அடிக்கப்படவில்லை. இதனால், சுவீடனுக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில் 0-1 என பிரான்ஸ் முன்னிலை பெற்றுள்ளது.