கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டம்: பிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி

ஸ்பெயின்- ஈராக் இடையிலான மற்றொரு பயிற்சி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

நான்ட்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது. இதை யொட்டி பிரதான அணிகள் பயிற்சி ஆட்டங்கள் மூலம் தங்களை தயார்படுத்தி வருகின்றன. பிரான்சின் நான்ட் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியும், 2 முறை உலக சாம்பியனுமான பிரான்ஸ், ஐவேரி கோஸ்டை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த மோதலில் 45-வது நிமிடத்தில் பிரான்சின் ரயான் செர்கி கோல் போட்டு முன்னிலை பெற்றுத்தந்தார். பிற்பாதியில் அசத்திய ஐவேரி கோஸ்ட் அணியில் குலா டுவே (55-வது நிமிடம்), அமத் டியாலோ (84-வது நிமிடம்) ஆகியோர் கோலடித்தனர். முடிவில் ஐவேரி கோஸ்ட் 2-1 என்ற கணக்கில் பிரான்சுக்கு அதிர்ச்சி அளித்தது.

உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக பிரான்ஸ் மேலும் ஒரு பயிற்சி ஆட்டத்தில் (வடக்கு அயர்ந்துக்கு எதிராக) விளையாட உள்ளது. உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 16-ந்தேதி செனகலை சந்திக் கிறது.

ஸ்பெயின்- ஈராக் இடையிலான மற்றொரு பயிற்சி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இன்னொரு பயிற்சி ஆட்டத்தில் மெக் சிகோ அணி 5-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை பந்தாடியது.