ரியோடி ஜெனீரோ,
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடு களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 48 அணி கள் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் 5 முறை சாம்பியனான பிரேசி லுடன், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்தும் இடம் பெற்றுள்ளது. பிரேசில் அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 13-ந்தேதி மொராக்கோவுடன் மோதுகிறது.
இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கான 26 பேர் கொண்ட பிரேசில் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அடிக்கடி காயத்தால் அவதிப்படும் அந்த அணியின் நட்சத்திர வீரர் 34 வயதான நெய்மார் 2023-ம் ஆண்டுக்கு பிறகு தேசிய அணிக்காக ஆடியதில்லை. அதனால் அவர் உலகக் கோப்பை அணிக்கு அழைக்கப்படுவாரா? இல்லையா? என்று ஒரு பக்கம் விவாதம் நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், பயிற்சியாளர் கார்லோ அன்செ லோட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் அவரை அணிக்கு தேர்வு செய்துள்ளார். சர்வதேச கால்பந்தில் பிரேசிலுக்காக அதிக கோல்கள் அடித்தவர் (79 கோல்) என்ற சிறப்புக்குரிய நெய்மாருக்கு இது 4-வது உலகக் கோப்பையாகும். 'நெய்மார் தனது உடல்தகுதியை மேம்படுத்தியுள்ளார். இந்த உலகக் கோப்பையில் அவர் முக்கியமான வீரராக இருப்பார்' என அன்செலோட்டி குறிப்பிட்டார்.
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நெய்மார் இடம்பெற்றுள்ளதால் பிரேசிலில் உள்ள அவரது ரசிகர்கள் உலகக்கோப்பையையே வென்றது போல துள்ளிக்குதித்து கொண்டாடட்டத்தில் ஈடுபட்டனர். நெய்மார் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.