கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: பராகுவே-பிரான்ஸ் போட்டியின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை

2-வது பாதியில் கோலை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிலடெல்பியா

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பராகுவே-பிரான்ஸ் இடையேயான போட்டியின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் நடத்தப்பட்டு வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று போட்டிகள் (நாக்-அவுட் சுற்றுகள்) முடிந்து, 3-வது சுற்று போட்டிகள் (ரவுண்ட் ஆப் 16) நடந்து வருகின்றன. இதில், வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு தகுதி பெறும்.

பரபரப்பான போட்டி

அந்த வகையில், அதிகாலை 2.30 மணிக்கு அமெரிக்காவின் பிலடெல்பியா மைதானத்தில் நடந்த 3-வது சுற்று போட்டி ஒன்றில் பராகுவே மற்றும் பிரான்ஸ் அணிகள் விளையாடின. இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றன. எனினும், கோல் கீப்பர்கள் கோல் அடிக்க விடவில்லை.

பரபரப்பாக நடந்த இந்த போட்டியின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. இதனால், 2-வது பாதியில் கோலை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.