கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: செனகல்லை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்திய நார்வே

நார்வே அணியின் மார்கஸ் ஹோல்ம்கிரென் பெடர்சன் போட்டியின் முதல் கோலை போட்டார்.

நியூயார்க்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஈராக் அணியை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி நார்வே வெற்றி பெற்றது.

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் நியூயார்க் நியூ ஜெர்சி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்ற 'ஐ' பிரிவு லீக் ஆட்டத்தில் நார்வே மற்றும் செனகல் அணிகள் விளையாடின.

43-வது நிமிடம்

இதில், போட்டியின் முதல் பாதியை நெருங்கும்வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். அப்போது, முதல் பாதி முடிய 2 நிமிடங்கள் மீதமிருந்த நிலையில், நார்வே அணியின் மார்கஸ் ஹோல்ம்கிரென் பெடர்சன் (43-வது நிமிடம்) போட்டியின் முதல் கோலை தன்னுடைய அணிக்காக போட்டார்.

இதனால், 1-0 என்ற புள்ளி கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றது. அதன்பின்னர், முதல் பாதியின் இறுதி வரை கோல் அடிக்கப்படவில்லை.

2-வது கோல்

இதன்பின்பு, போட்டியின் 48-வது நிமிடத்தில் நாரவேவின் எர்லிங் ஹாலாந்து 2-வது கோல் போட்டார். இதனால் நார்வே அணி, 2-0 என்ற புள்ளி கணக்கில் தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. அடுத்து 53-வது நிமிடத்தில் செனகல் அணியின் இஸ்மாயிலா சர், ஒரு கோல் போட்டார். இதனால், 2-1 என்ற புள்ளி கணக்கில் நார்வே தொடர்ந்து முன்னிலையில் நீடித்தது.

3-வது கோல்

தொடர்ந்து எர்லிங் ஹாலாந்து 58-வது நிமிடத்தில் அணிக்காக மற்றொரு போட்டார். இதனால், 3-1 என்ற புள்ளி கணக்கில் நார்வே அணி வெற்றியை தொட்டு விடும் தொலைவில் இருந்தது. எனினும், 2-வது பாதிக்கு பின்னர் அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இஸ்மாயிலா சர், மற்றொரு கோலை போட்டார்.

போட்டி 3-2 என பரபரப்படைந்தது. எனினும், அதன்பின்னர் கோல் அடிக்கப்படவில்லை. இதனால், போட்டி முடிவில் நார்வே அணி ஒரு கோல் வித்தியாசத்தில் செனகல் அணியை வீழ்த்தியது.