கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இத்தாலி அணி வெற்றி

பங் கேற்கும் 48 அணிகளில் இதுவரை 42 அணிகள் தகுதி பெற்று விட்டன.

ரோம்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதில் பங் கேற்கும் 48 அணிகளில் இதுவரை 42 அணிகள் தகுதி பெற்று விட்டன. மீத முள்ள 6 இடங்களை முடிவு செய்வதற்கான தகுதி சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது.

இத்தாலியின் பெர்காமோவில் நடந்த ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றின் 'பிளே-ஆப்' அரையிறுதியில் 4 முறை சாம்பியனான இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்தை வீழ்த்தியது. சாண்ட்ரோ டோனாலி, மொசி கியான் கோல் அடித்தனர். வருகிற 31-ந் தேதி நடக்கும் இதன் இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணி, போஸ்னியாவு டன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி உலகக் கோப்பை போட் டிக்கு தகுதி பெறும்.