சான் பிரான்சிஸ்கோ
உலக கோப்பை கால்பந்து தொடரின் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள பராகுவே மற்றும் துருக்கி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பராகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
போட்டியில் பராகுவேவின் நடுகள வீரரான மதியாஸ் கலார்ஜா (வயது 24) அதிரடியாக விளையாடினார். போட்டி தொடங்கிய 64-வது வினாடி அவர் கோல் போட்டார். இதனால், உலக கோப்பை கால்பந்து தொடரின் விரைவாக கோல் போட்ட வீரரானார்.
பராகுவேவின் தொடக்க போட்டியில் அவர் விளையாடவில்லை. எனினும், இந்த போட்டியில் அவர் தன்னுடைய சாதனையை பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன்பு, மொராக்கோ அணியின் சாய்பாரி, போட்டி தொடங்கி 1 நிமிடம் 10 வினாடிகளில் கோல் அடித்தது பரபரப்பாக பார்க்கப்பட்டது. நடந்து வரும் பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் விரைவாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையை அவர் ஏற்படுத்தினார். இந்த சாதனையை மதியாஸ் முறியடித்து உள்ளார்.
இந்த தொடரில், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது செக்கியாவின் மிச்சல் சாதிலேக் (5 நிமிடங்கள் 10 வினாடிகள்) அடித்திருந்ததே விரைவான கோலாக இதுவரை பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.