கால்பந்து

உலக கோப்பை கால்பந்து: சவுதி அரேபியாவை பந்தாடி ஸ்பெயின் அபார வெற்றி

சவுதி அரேபியா அணியின் கோல் முயற்சிகள் எதற்கும் பலன் கிடைக்கவில்லை.

அட்லாண்டா,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சவுதி அரேபியாவை 4-0 என்ற கணக்கில் பந்தாடி ஸ்பெயின் அபார வெற்றி பெற்றது.

ஸ்பெயின்-சவுதி அரேபியா

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் எச்-பிர்வில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின் மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. இந்த போட்டி அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே கோல் அடிக்கும் முனைப்பில் ஸ்பெயின் அணி தீவிரம் காட்டியது.

இதற்கு பலனாக ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் ஒயர்சபால் அசிஸ்ட்-ஐ சரியாக பயன்படுத்திக் கொண்ட லமைன் யமால் கோலாக மாற்றினார். இதனால் ஸ்பெயின் அணி 1-0 கணக்கில் முன்னிலை பெற்றது.

பலன் கிடைக்கவில்லை

இதைத் தொடர்ந்து 21-வது நிமிடத்தில் ஏமெரிக் லபோர்டி அமைத்து கொடுத்த செட்-அப்-ஐ சரியாக பயன்படுத்திய மைக்கேல் ஒயர்சபால் கோல் அடிக்க ஸ்பெயின் அணி 2-0 என முன்னேற்றம் கண்டது. மேலும் 24-வது நிமிடத்தில் டேனி ஒல்மோ செட்-அப்பில் மைக்கேல் தனது 2-வது கோலை அடிக்க ஸ்பெயின் அணி 3-0 என்ற நிலையை அடைந்தது.

ஒருபக்கம் ஸ்பெயின் கோல் கணக்கை அதிகப்படுத்த மறுப்பக்கம் சவுதி அரேபியா அணியின் கோல் முயற்சிகள் எதற்கும் பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் முதல் பாதி வரை ஸ்பெயின் அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

அபார வெற்றி

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரம் காட்டிய நிலையில், 49-வது நிமிடத்தில் சவுதி அரேபிய வீரர் ஹாசன் அல்டாம்பக்தி ஓன் கோல் அடிக்க ஸ்பெயின் அணி 4-0 என முன்னேறியது. ஆட்டத்தின் இறுதிவரை சவுதி அரேபியா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஸ்பெயின் அணி 4-0 என்ற கணக்கில் சவுதி அரேபியாவை பந்தாடி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஸ்பெயின் அணி தனது முதல் வெற்றி பதிவு செய்துள்ளது.