நியூயார்க்,
கியூராசாவ் கோல் கீப்பர் எலாய் ரூம் 15 ஷாட்டுகளையும் தடுத்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஈகுவடார் மற்றும் கியூராசாவ் மோதிய ஆட்டம் கோல் ஏதுமின்றி (0-0) டிராவில் முடித்தது. ஆட்டம் முழுவதும் ஈகுவடார் வீரர்கள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திய போதிலும், கியூராசாவ் கோல் கீப்பர் எலாய் ரூம் அபாரமாக செயல்பட்டார். இலக்கை நோக்கி அடிக்கப்பட்ட 15 ஷாட்டுகளையும் தடுத்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.
இதன் மூலம் ஒரே ஆட்டத்தில் அதிக கோல் வாய்ப்புகளை தடுத்த கோல் கீப்பர்களின் பட்டியலில் எலாய் ரூம் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன், 2014 உலகக் கோப்பையில் பெல்ஜியத்துக்கு எதிராக அமெரிக்காவின் டிம் ஹோவர்ட், 16 வாய்ப்புகளை தடுத்து சாதனை படைத்திருந்தார்.
இந்த டிரா மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல் புள்ளியை கியூராசாவ் அணி பெற்றுள்ளது.