கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: முதன்முறையாக களம் காணும் உஸ்பெகிஸ்தான்; கொலம்பியாவை வீழ்த்துமா..?

கடந்த 2022-ம் ஆண்டு கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பிய அணி பங்கேற்கவில்லை.

மெக்சிகோ சிட்டி

23-வது உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் மெக்சிகோ சிட்டி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்ற 'கே' பிரிவு லீக் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் மற்றும் கொலம்பியா அணிகள் விளையாடி வருகின்றன.

கடந்த 2022-ம் ஆண்டு கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பிய அணி பங்கேற்கவில்லை. அதன்பின்னர் உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடுவதற்காக அந்த அணி மீண்டும் வந்துள்ளது.

இதேபோன்று உஸ்பெகிஸ்தான் அணி முதன்முறையாக உலக கோப்பை தொடரில் விளையாடுகிறது. முதல் பாதியில் 40-வது நிமிடத்தில் கொலம்பிய அணியின் வீரர் டேனியல் முனோஸ் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்பாக கூடியுள்ளது.