கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: ஈராக்கை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ்

போட்டியின் 14-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்காக, கைலியன் எம்பாப்பே முதல் கோலை போட்டார்.

பிலடெல்பியா

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஈராக் அணியை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி பெற்றது.

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் பிலடெல்பியா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 2.30 மணிக்கு நடைபெற்ற 'ஐ' பிரிவு லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஈராக் அணிகள் விளையாடின.

14-வது நிமிடம்

இதில், போட்டியின் 14-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்காக, கைலியன் எம்பாப்பே முதல் கோலை போட்டார். இதனால், 1-0 என்ற புள்ளி கணக்கில் அந்த அணி முன்னிலையில் இருந்தது. அப்போது, கடுமையான புயல் வரவுள்ளது என எச்சரிக்கப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் மைதானத்தின் கூரையிடப்பட்ட பகுதிகளில் தஞ்சம் அடையும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்பின்னர், முதல் பாதியின் இறுதி வரை கோல் அடிக்கப்படவில்லை.

2-வது கோல்

இதன்பின்பு, போட்டியின் 54-வது நிமிடத்தில் எம்பாப்பே மற்றொரு கோல் போட்டார். இதனால் பிரான்ஸ் அணி, 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.

3-வது கோல்

தொடர்ந்து உஸ்மானே திம்பலி 66-வது நிமிடத்தில் 3-வது கோலை போட்டார். இதனால், 3-0 என்ற புள்ளி கணக்கில் பிரான்ஸ் வெற்றியை நோக்கி சென்றது. அதன்பின்னர் கோல் அடிக்கப்படவில்லை.

ஆட்டத்தில் யாருக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்படவில்லை. ஆனால், ஈராக் அணிக்கு ஒரு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி அவற்றில் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஈராக் அணி கடைசி இடத்திற்கு சென்றது.