கால்பந்து

உலகக் கோப்பை காலிறுதி: பிரான்ஸ்-மொராக்கோ நாளை மோதல்

அர்ஜென்டினா, முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

போஸ்டன்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது மற்றும் 3-வது சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன்கள் பிரேசில், ஜெர்மனி உள்பட 40 அணிகள் நடையை கட்டின. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் காலிறுதி சுற்று நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணிக்கு போஸ்டனில் நடக்கும் முதலாவது காலிறுதியில் 2 முறை சாம்பியனான தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் பிரான்ஸ் அணி, 7-ம் நிலை அணியான மொராக்கோவுடன் மோதுகிறது.

இவ்விரு அணிகள் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4-ல் பிரான்சும், ஒன்றில் மொராக்கோவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டம் டிரா ஆனது.