கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: தகுதிக்கான ‘பிளே-ஆப்' சுற்று ஆட்டங்கள் இன்று தொடக்கம்

கடைசி கட்ட தகுதி சுற்று இன்று முதல் 31-ந்தேதி வரை நடக்கிறது.

சென்னை,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்கிறது. இந்த போட்டியில் பங் கேற்கும் 48 அணிகளில் இதுவரை 42 அணிகள் தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 6 அணிகளை தேர்வு செய்வதற்கான கடைசி கட்ட தகுதி சுற்று இன்று முதல் 31-ந்தேதி வரை நடக்கிறது.

16 அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு வந்துள்ளன.இவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இரு அரையிறுதி ஆட்டங்கள் நடக்கும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட் டியில் மோதி அதில் வெற்றியாளராக உருவெடுக்கும் அணி உலகக் கோப்பை போட்டிக்குள் நுழையும்.

4 முறை உலக சாம்பியனான இத்தாலி அணி 'ஏ' பிரிவில் இடம் பெற் றுள்ளது. இத்தாலி அரையிறுதியில் வடக்கு அயர்லாந்து அணியை இன்று சந்திக்கிறது.