சென்னை,
எம்.சி.சி. முருகப்பா தங்கக் கோப்பைக்கான 97-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஆயில்-கர் நாடகா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 3 டிரா, ஒரு தோல்வி கண்ட கர்நாடகா (ஏ பிரிவு) அரைஇறுதி வாய்ப்பை இழந்தது. மற்றொரு ஆட்டத்தில் மலேசியா ஆக்கி பெடரே ஷன் ஜூனியர் 2-1 என்ற கோல் கணக்கில் சாய் (போபால்) அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. சாய் (பி பிரிவு) அணி (ஒரு டிரா, 3 தோல்வி) அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்தது.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் பாரத் பெட்ரோலியம்- இந்திய கடற்படை (பிற்பகல் 2.30 மணி), மலேசியா- தமிழ்நாடு (மாலை 4.15 மணி), இந்தியன் ஆயில்-இந்திய ராணுவம் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.