சென்னை,
எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பைக்கான 97-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே, இந்திய கடற்படை அணியுடன் மோதியது. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இந்திய கடற்படை அணியில் யோகேஷ் சிங் (27-வது நிமிடம்), செல் வராஜூம் (57-வது நிமிடம்), ரெயில்வே அணியில் பிரதாப் லக்ரா (39-வது நிமிடம்), அதுல் தீப்பும் (55-வது நிமிடம்) கோலடித்தனர். இதைத்தொடர்ந்து வெற்றியை நிர்ணயிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்திய கடற்படை அணி 4-2 என்ற கோல் கணக்கில் ரெயில்வேக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரைஇறுதியில் பாரத் பெட்ரோலியம்-இந்திய ராணுவம் அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட் டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ராணுவ அணியில் அக்ஷய் துபேவும் (27-வது நிமிடம்), பாரத் பெட்ரோலியம் அணியில் அன்மோல் எக்காவும் (35-வது நிமிடம்) கோல் போட்டனர். வெற்றியை தீர்மானிக்க நடத்தப் பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் பாரத் பெட்ரோலியம் 4-1 என்ற கோல் கணக்கில் ராணுவத்தை தோற்கடித்து இறு திப்போட்டியை எட்டியது.
இன்று மாலை 6.15 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய கடற்படை-பாரத் பெட்ரோலியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.