ஹாக்கி

அகில இந்திய ஆக்கி: ரெயில்வே வெற்றி

கர்நாடகா-பஞ்சாப் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

சென்னை,

எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பைக்கான 97-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய கடற்படை அணி 5-2 என்ற கோல் கணக்கில் சாய் அணியை (போபால்) சாய்த்தது. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஆயிலை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்றது. கர்நாடகா-பஞ்சாப் நேஷனல் வங்கி இடையிலான இன்னொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் பாரத் பெட்ரோலியம்-சாய் (மாலை 4.15 மணி), தமிழ்நாடு-இந்திய கடற்படை (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.

SCROLL FOR NEXT