சென்னை,
எம்.சி.சி. முருகப்பா தங்கக் கோப்பைக்கான 97-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக் கப்பட்டு மோதுகின்றன. 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பாரத் பெட்ரோலியம் அணி 5-1 என்ற கோல் கணக்கில் தமிழகத்தை தோற்கடித்தது. பாரத் பெட்ரோலியம் அணியில் தேவிந்தர் வால்மிக் (4-வது நிமிடம்). மன்தீப் சிங் (5-வது, 57-வது நிமிடம்). சுப்ஹான் அபித் (24-வது நிமிடம்). சரன்ஜீத் சிங் (54-வது நிமிடம்) கோலடித்தனர். தமி ழக அணி தரப்பில் முத்துகுமார் (49-வது நிமிடம்) பதில் கோல் திருப்பினார். மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே அணி 2-1 என்ற கோல் கணக்கில் ராணுவ அணியை வீழ்த்தி போட்டிளயை வெற்றியுடன் தொடங் கியது. இந்தியன் ஆயில்- பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் இடையிலான ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிரா வில் முடிந்தது.
இன்றைய ஆட்டங்களில் இந்திய கடற்படை -சாய் (பிற்பகல் 2.30 மணி), கர்நாடகா-பஞ்சாப் நேஷனல் வங்கி (மாலை 4.15 மணி), இந்தியன் ரெயில்வே- இந்தியன் ஆயில் (மாலை 6 மணி) மோதுகின்றன.