சென்னை,
எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பைக்கான 97-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பாரத் பெட்ரோலியம்-இந்திய கடற்படை அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 5-5 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் தமிழக அணி 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியா ஜூனியர் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. தமிழக அணியில் யோஜின் மின்ஸ் 2 கோலும், பிரித்வி, பத்ராஸ் திர்கே தலா ஒரு கோலும் அடித்தனர். இந்தியன் ஆயில்-இந்திய ராணுவம் மோதிய இன்னொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்தியன் ரெயில்வே-பஞ்சாப் நேஷனல் வங்கி (பிற்பகல் 2.30 மணி), இந்திய கடற் படை-மலேசியா ஜூனியர் ஆக்கி (மாலை 4.15 மணி) அணிகள் மோதுகின்றன.