மோகி,
ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் மோகி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான தென்கொரியாவுடன் மோதியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை விரட்டியடித்து தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இந்திய அணியில் சுப்ரியா 3 கோலும், மது சிதார், சுக்வீர் கவுர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான சீனாவுடன் மல்லுக்கட்டுகிறது.
ஆண்கள் பிரிவில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான தென்கொரியாவை எதிர்கொள்கிறது.