மொகாலி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியில் நடந்தது. அதன் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது.
ஜப்பானுக்கான முதல் கோலை கசுமாசா மட்சுமோட்டோ அடித்தார். இதனால், 1-0 என ஜப்பான் முதல் பாதியில் முன்னிலை வகித்தது.
இதன்பின்னர், 2-வது பாதியில் இந்தியா அதிரடியாக விளையாடியது. வீழ்ச்சியில் இருந்து எழுந்து வந்தது. ஷிலானந்த் லாக்ரா, தில்ப்ரீத் சிங், ஜுக்ராஜ் சிங் மற்றும் விவேக் சாகர் பிரசாத் ஆகியோர் இந்தியாவுக்கான கோல்களை அடித்தனர். இதனால், போட்டி முடிவில், 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது.
இது இந்தியாவுக்கான 6-வது பட்டம் ஆகும். தொடர்ச்சியாக 3-வது முறையாக பெற்ற ஹாட்-டிரிக் வெற்றியும் ஆகும். இதற்கு முன், நேற்று நடந்த அரை இறுதி போட்டியில், இந்தியா, 8-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது.