ஜலந்தர்,
6 அணிகள் இடையிலான 9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது. இந்திய தரப்பில் சுக்ஜீத் சிங் (12 மற்றும் 34-வது நிமிடம்) கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (27 மற்றும் 31-வது நிமிடம்) தலா 2 கோலும், ஜூக்ராஜ் சிங் ஒரு கோலும் (47-வது நிமிடம்) அடித்தனர். ஏற்கனவே வங்காளதேசத்தை வீழ்த்திய இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இந்திய அணி தனது 3-வது லீக்கில் ஜப்பானுடன் இன்று இரவு 7 மணிக்கு மோதுகிறது.
முன்னதாக நடந்த மற்ற ஆட்டங்களில் மலேசியா 3-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவையும், ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தையும் வீழ்த்தின .