ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை சந்திக்கிறது இந்தியா

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

புதுடெல்லி,

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மற்றும் மொகாலியில் வருகிற 27-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை நடக்கிறது. லீக் சுற்று ஆட்டங்கள் ஜலந்தரிலும், அரைஇறுதி மற்றும் பதக்கத்துக்கான ஆட்டங்கள் மொகாலியிலும் அரங்கேறுகிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, மலேசியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, வங்காளதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரு கிற 27-ந் தேதி வங்காளதேசத்தை சந்திக்கிறது. மற்ற லீக் ஆட்டங்களில் வருகிற 29-ந் தேதி சீனாவையும், 30-ந் தேதி ஜப்பானையும், நவம்பர் 1-ந் தேதி மலேசியாவையும், 2-ந் தேதி தென்கொரியாவையும் எதிர்கொள்கிறது. இந்திய அணி யின் லீக் ஆட்டங்கள் அனைத்தும் இரவு 7 மணிக்கு நடக்கிறது.

SCROLL FOR NEXT