ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: இந்தியா-மலேசியா இன்று மோதல்

4-வது லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ஜலந்தர்,

6 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில் வங் காளதேசம் (13-0), சீனா (5-2), ஜப்பான் (4-1) அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்து அரைஇறுதியை உறுதி செய்து விட்டது.

ஹர்மன்பிரீத் சிங்

இந்த நிலையில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் தனது 4-வது லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. மலேசிய அணி, சீனா, தென்கொரியா, வங்காளதேசம் அணிகளை வீழ்த்தி தொடர்ச்சியாக 3 வெற்றியை பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை அதட்டி இருந்தது.

SCROLL FOR NEXT