ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி; அரை இறுதியில் இந்தியா-தென்கொரியா இன்று மோதல்

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு வந்துள்ளது.

மொகாலி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி அரை இறுதியில் இந்தியா மற்றும் தென்கொரியா அணிகள் இன்று விளையாடுகின்றன.

6 அணிகள் இடையிலான 9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் நடந்து வருகிறது. இதில் மொகாலியில் இன்று நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென்கொரியாவை (இரவு 7 மணி) எதிர்கொள்கிறது.

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு வந்துள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் 8-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வெற்றி பெற்றிருந்தது. இதனால் இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். முன்னதாக மாலை 4.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு அரைஇறுதியில் ஜப்பான்-மலேசியா அணிகள் மோதுகின்றன.

SCROLL FOR NEXT