ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: அரைஇறுதியில் இந்திய அணி

தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பெற்றதுடன் , அரைஇறுதியையும் உறுதி செய்தது.

ஜலந்தர்,

6 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பெற்றதுடன் , அரைஇறுதியையும் உறுதி செய்தது.

இந்திய அணியில் அபிஷேக் (2), கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், விஷ்ணுகாந்த் சிங் ஆகியோர் கோலடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 6-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை புரட்டியெடுத்து 3-வது வெற்றியுடன் அரைஇறுதிக்குள் நுழைந்தது.

SCROLL FOR NEXT